நாகர்கோவில் மாநகராட்சியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 February 2024

நாகர்கோவில் மாநகராட்சியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு.


நாகர்கோவில் மாநகராட்சியின் கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆய்வு பணிகளை  மேயர் திரு.ரெ.மகேஷ் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்  திரு.ஆனந்த் மோகன் அவர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்  மாநகராட்சியின் சுமார் 72000 வீடுகளில் 60,000 மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது.

30,000 வீடுகளுக்கு குடிநீர் அளவு மீட்டர் பொருத்தப்பட்டுவுள்ளது, மேலும் வார்டு 1,2,3,50,51,52 ஆகிய வார்டுகளுக்கு 24×7 மணி நேரமும் குடிநீர் கிடைக்க முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது, புத்தன் அணையிலிருந்து வரும் நீரின் தேவைகளை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment