தக்கலை அருகே சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 -டன் ரேசன் அரிசி பறிமுதல் . - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 14 May 2024

தக்கலை அருகே சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 -டன் ரேசன் அரிசி பறிமுதல் .


 தக்கலை அருகே சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 -டன் ரேசன் அரிசி  பறிமுதல் .



கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஸ் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று அதிகாலை 04:30 மணியளவில் தக்கலை, மேட்டுக்கடை, மணலி ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு கூண்டு வாகனத்தை நிறுத்த முயன்ற போது அது நிற்காமல் சென்றுவிட்டது. உடனே பறக்கும் படையினர்ர சுமார் 3 -கி. மீ தூரம் விரட்டி சென்ற போது வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்



வாகனத்தை சோதனை செய்த போது  அதில் சுமார் 3000 -கிலோ பொது விநியோக அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொது விநியோக அரிசியினை கைப்பற்றி உடையார்விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனத்தை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment