பத்மநாதபுரம் அரண்மனை திடீர் மூடல் பொதுமக்கள் முற்றுகை.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநாதபுரத்தில் உள்ள பத்மநாதபுரம் அரண்மனை மிகவும் பிராதானமானதாகும். இந்த நிலையில் திடீரென மூடப்பட்டது. விசாரித்ததில் அரண்மனை ஊழியர் மரணம் அடைந்ததால் அரண்மனை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் ஊழியர் ஒருவர் இறந்த போது ஏன் அரண்மனை மூடப்படவில்லை என்று கோஷம் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவு கொண்டு வந்தனர். இதனால் அரண்மனை அரை நாள் மூடப்பட்டது. கன்னியாகுமரி செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment