கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள் . - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 23 May 2024

கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள் .

 


கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள் .


உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் சூரிய உதயம் மற்றும் சூரியஅஸ்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து சுற்றுலா தளங்களில் விவேகானந்த மண்டபம் . காந்தி மண்டபம். ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் காவல்துறையினரால் புற காவல் நிலையத்தை  சூரிய உதயம் ஆகும் இடத்தில் வைத்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை காண்பதில் பெரும் சிரமத்தில் ஈடுபடுகின்றனர். பலருக்கு சூரிய உதயம் எங்கு உதிக்கிறது என்று தெரியாமல் சுற்றித் திரிகின்றனர். காரணம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக புற காவல் நிலையம் வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு களிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக புற காவல் நிலையத்தை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment