கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பேட்டரி கார்களை வைத்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல விடாமல் அச்சுறுத்தல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுமா ? - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 May 2024

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பேட்டரி கார்களை வைத்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல விடாமல் அச்சுறுத்தல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுமா ?

 


கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பேட்டரி கார்களை வைத்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல விடாமல் அச்சுறுத்தல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுமா ?




கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் பின்னால் அமைந்திருக்கும் திரிவேணி சங்கமத்தில் மாங்காய் வியாபாரம் செய்து வரும் அகஸ்தீஸ்வரம் ஊரை சேர்ந்த கரடி என்பவர் எட்டு கடை நடத்தி வருகிறார் இவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தவிர வேறு யாரும் அங்கு கடை வைக்க கூடாது என்று அராஜகம் செய்து வருகிறார்கள் அங்கே கடை நடத்தி வருவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கடை வைக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை இடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கடற்கரை ஓரங்களில் இருக்கும்  அனைத்து கடைகளை உடனடியாக ஆக்கிரப்பு அகற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்வதற்கு உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் லஞ்ச ஒழிப்பு துறவு இடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது உடனடியாக பகவதி அம்மன் திருக்கோயில் பின்னால் உள்ள கடைகளை உடனடியாக காவல்துறை அகற்ற வேண்டும்.



  சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் பலமுறை பொதுமக்கள் சார்பாக புகார் மனுகள் கொடுக்கப்பட்டுள்ளன . அதிகாரியிடம்  இந்த பிரச்சனை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்



பேட்டரி கார்களை வைத்து அச்சுறுத்தும்இளைஞர்கள்  கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் பின்னால் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறுவாக 4 பேட்டரி கார் வைத்து அதிக கட்டணமான
ஒரு குழந்தைக்கு ரூபாய் 100 வசூல் செய்து அராஜகம் செய்து வருகின்றனர். பேட்டரி கார் நடத்தி வரும் உரிமையாளருக்கு
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளது. இவரிடம் இரண்டு இளைஞர்களை வேலைக்கு வைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக நடந்து செல்லும் இடத்தில் இந்த பேட்டரி கார் சுற்றுலா பயணிகள் காலுக்குள் ஏறி செல்கின்றது சுற்றுலா பயணிகள் ஏதாவது சொன்னால் அவர்களிடம் தகராறு செய்வது வாடிக்கையாக உள்ளது சுற்றுலா தளத்தில் இந்த பேட்டரி கார் சவாரி செய்வதை தடை செய்ய வேண்டும் சுற்றுலா தளத்தில் ரவுடிகள் போல் அட்டகாசம் செய்து வரும் இந்த பேட்டரி கார் உரிமையாளர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக நடந்து செல்வதற்கு காவல்துறை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலரும் கோரிக்கை வைத்துள்ளனர்

No comments:

Post a Comment