குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 


குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்  ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில்  இன்று (24.05.2024) ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து  குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 


 இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை  தொடர்ந்து கண்காணித்து குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.  


 இக்கூட்டத்தில், தலைமையிட கூடுதல்  காவல் கண்காணிப்பாளர், நாகர்கோவில் மற்றும் குளச்சல் உட்கோட்ட  உதவி கண்காணிப்பாளர்கள், தக்கலை மற்றும் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து தனிப்படை அதிகாரிகள், தனிப்பிரிவு அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment