தோவாளை ஒன்றியம் கீழ கேசவன் புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்1986 ஆம் ஆண்டு 43 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

தோவாளை ஒன்றியம் கீழ கேசவன் புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்1986 ஆம் ஆண்டு 43 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை


 தோவாளை ஒன்றியம் கீழ கேசவன் புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்1986 ஆம் ஆண்டு 43 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.  கேசவன் புதூரில் மனைக்கான இடம் போதுமான அளவில் இருந்தும், 38 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் பட்டா வழங்கப் பட்டவர்களுக்கு  வீட்டுமனை அளவீடு செய்து ஒப்படைக்கப் படவில்லை. இது குறித்து பலமுறை மனு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில் வீட்டு மனை கிடைக்காத குடும்பங்களுக்கு மனைக்கான இடம் கேட்டு இன்று  தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  ஜமாபந்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் மனுகொடுத்தனர். இதில் சிபிஐ எம் தோவாளை ஒன்றிய செயலாளர் எஸ்.மிக்கேல், வட்டாரக்குழு உறுப்பினர் எஸ். சக்திவேல், கேசவன் புதூர் கிளை செயலாளர் மனௌகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment