மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு


 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.


இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பையா,குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் இ.கா.ப,கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள்,அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும்,அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட  சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

No comments:

Post a Comment