கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற திரு விஜய் வசந்த் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற திரு விஜய் வசந்த் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

 


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற திரு விஜய் வசந்த் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.


தமிழக பாராளுமன்ற தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திண்டுக்கலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய மக்களாட்சி பேரவையின் தலைவர் சமத்துவ சமூக செம்மல் டாக்டர் டி. ஆர். ராஜமோகன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கு இணங்க கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு விஜய் வசந்த் அவர்களை செவ்வாய்க்கிழமை அன்று தேசிய மக்களாட்சி பேரவையின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேரவையின் சார்பாக சால்வை அணிவித்து தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment