கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 26-06-2024 ஸ்காட்  கல்லூரியில் வைத்து காவல்துறை சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான  சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் கலந்து கொண்டார்


இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவ மாணவியர்கள் சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், சமூக வலைதளங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் நல்ல செயல்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்  எனவும், சமூக வலைதளங்கள் ஒரு போதை என்றும் அதனை மாணவ மாணவியர்கள் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி பெண்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள் இருப்பின் உடனடியாக சைபர்  காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். மேலும் மாணவ மாணவியர்கள் போதைப் பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால்  கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம் என்றும் கூறினார்.


மேலும் கட்டுரை பேச்சுப் போட்டி ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

No comments:

Post a Comment