தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் பதினெட்டு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 June 2024

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் பதினெட்டு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் பதினெட்டு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளையின் சார்பாக தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா) தொழுகை அழகியமண்டபம், ஆக்ஸ்ஃபோர்ட் ஸ்கூல் திடலில் வைத்து நடைபெற்றது..


இதில் மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர். ஆஷிக் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு  பெருநாள் உரையாற்றினார்கள்  தொழுகைக்கு பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கீழ்கண்டவாறு சகோதரர். ஆஷிக் M.I.Sc பேசினார்


1. இப்ராஹிம் நபி அவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்கள் தான் இந்த பெருநாளின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஹஜ் பிரயாணத்திலும் பிரதிபலிக்கிறது,


எனவே நபி இப்ராஹிம் (அலை) அவர்களைப் போன்று கொள்கை உறுதியோடு வாழ்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் , இப்பெருநாளின் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்வுறுகின்றனர் என்றும் பேசினார்.


2. ”நபி இப்ராஹிம் (அலை) ஒரு அழகிய முன் மாதிரி” எனும் வடிவில் இப்ராஹிம் நபி அவர்களின்  கொள்கை உறுதியையும், சேவை மனப்பான்மையையும் அனைத்து இஸ்லாமியர்களும் பின்பற்றும் வகையில் 10 மாத தொடர் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.  


திடல் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும் , பெண்களும் குழந்தைகளும், முதியோர்களும் கலந்து கொண்டனர், 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக களியக்காவிளை, தேங்காய் பட்டணம், இனயம், குளச்சல், திங்கள் நகர், ஆளூர், இரவிபுதூர்கடை, தக்கலை, குலசேகரம், கடையாலுமூடு, திட்டுவிளை, லாயம், பண்ணையூர், பஞ்சலிங்கபுரம், கன்னியாகுமரி, மந்தாரம்புதூர், நாகர்கோவில் என பதினெட்டு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 


தொழுகையும் , பெருநாள் உரையும் முடிந்த பிறகு, பெரும்பாலான மக்கள் இருகரம் ஏந்தி பிரார்த்தினர், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  மக்கள் கலைந்து சென்ற பிறகு திடலும் அழகிய முறையில் ஜமாஅத் தின் தன்னார்வலர்களால் சுத்தம் செய்யப்பட்டது.


இப்படிக்கு,

ஹுசைன் ஜவாஹிரி 

மாவட்ட தலைவர்​

தொ.எண் : 7397011745​

No comments:

Post a Comment