கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை அமைக்க விஜய்வசந்த் கோரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை அமைக்க விஜய்வசந்த் கோரிக்கை.

 


கன்னியாகுமரியில் காமராஜருக்கு  1000 அடி உயர சிலை அமைக்க விஜய்வசந்த் கோரிக்கை.


கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  பாராளுமன்றத்தின் 377-வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள்.இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும்.இந்த சிலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும். எனவே காமராஜர் சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment