எஸ் பி அலுவலகத்தில் குடும்பத்தினர் இரவில் திடீர் தர்ணா போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38). வெளிநாட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர், சம்பவ தினம் வீட்டில் நடந்த மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் மகேஷ் கொலை செய்யப்பட்டார். இதில் திருவிதாங்கோடு பகுதி சேர்ந்த மெக்கானிக் பெனிட் (27), அவரது உறவினர் பிபின் ஜேக்கப் (23) திக்கணம் கோடு பகுதி ரேன்ஸ் ( 23) ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து. இதில் விபின் ஜேக்கப்பை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பெனிட்டின் உறவினரான மறவன் குடியிருப்பு பகுதி சேர்ந்த தொழிலாளி துரை என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பெனிட் சரண் அடைந்த பிறகு துரையை விடுவிப்பதாக தக்கலை போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துரையின் மனைவி பானு, மகள் நிஷா, அவரது கணவர் ஆன்றோ ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம் முன்பு திடீரென அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபடக்கூடாது என்றும் முறையாக அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும் என போலீசார் கூறியதையடுத்து தர்ணாவை கைவிட்டு 3 பேரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment