80 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 July 2024

80 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதி



80 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதி


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுகாணி ஆனைகுளம் ஒரு நூறாம் வயல் இங்குதான் அதிகமாக மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். எங்கிருந்துதான் அவர்கள் பயன்படுத்தும் முக்கியசாலை 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாலத்தில் மழைக்காலங்களில் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாமல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மழைக்காலங்களில் மக்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கோ அத்தியாவசிய பொருட்கள் வாங்கவோ வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து பல போராட்டங்களும் பல மனுக்களும் அதிகாரிகளிடம் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பாலத்தை சரி செய்து மலைவாழ் மக்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன்  T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment