ஆபத்தான நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 18 July 2024

ஆபத்தான நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்


 ஆபத்தான நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்


 கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பத்து காணியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இது முழுவதுமாக மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த ஒரு முதலுதவி சாதனங்களோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகன வசதிகளோ கிடையாது. அவசர சிகிச்சைக்கு கூட வெளி மருத்துவமனையை தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அதற்குரிய வருமானம் இல்லை என அந்த மக்கள் வேதனைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சுகாதார நிலையம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்று அங்குள்ள மக்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலைவாழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர் . எங்களின் நிலை எப்போது மாறும் என்று வருத்தப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் தலையிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment