கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரம் சந்தை வியாபாரிகளை விரட்டி வியாபாரம் செய்த இடத்தை மண்வெட்டி நிரப்பியதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையில் சுமார் 40 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வந்த மீன் வியாபாரிகளை அங்கிருந்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து அவர்களை விரட்டி, வியாபாரம் செய்த இடத்தை மண்வெட்டி நிரப்பியதால் பரபரப்பு-தங்களுக்கு நீதி வேண்டும் என மீன் வியாபாரிகள் குமுறல்-மீன் வியாபாரிகளுக்கு ஆதரவாக அங்குள்ள காய்கறி வியாபாரிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்,இங்கு மீன் வியாபாரம் நடந்தால் மட்டுமே தங்களுக்கு காய்கறி வியாபாரம் நடக்கும் என்பதால் அனைவரும் இணைந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment