காடாக காட்சியளிக்கும் நிழலகம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 July 2024

காடாக காட்சியளிக்கும் நிழலகம்

 


காடாக காட்சியளிக்கும் நிழலகம்


கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா முழுக்கோடு ஊராட்சி உத்திரங்கோடு பகுதியில் உள்ள நிழலகத்தை சுற்றி செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. பள்ளி மாணவர்களும் பயணிகளும் பேருந்துக்காக காத்திருக்கும் போது அச்சத்தோடு இருக்கின்றனர். இரவு நேரங்களில் ஒரு மின்விளக்கு கூட இல்லை. 100 நாட்கள் வேலை ஆட்களை வைத்து சுத்தம் செய்தால் கூட ஒரே நாளில் சுத்தம் செய்யலாம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குறை கூறுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதளச் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T. இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment