கட்டிய இரண்டு மாதத்தில் உடைந்த காங்கிரீட் சாலை மக்கள் அவதி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 July 2024

கட்டிய இரண்டு மாதத்தில் உடைந்த காங்கிரீட் சாலை மக்கள் அவதி

 


கட்டிய இரண்டு மாதத்தில் உடைந்த காங்கிரீட் சாலை மக்கள் அவதி


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வெள்ளாங்கோடு ஊராட்சி மாவேலி விளையில் இருந்து அம்பலக்கடையை நோக்கி செல்லும் பாதையில் கான்கிரீட் சாலை போட்டு இரண்டு மாதத்தில் சாலை பழுதடைந்துள்ளது. அந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. இதைப்பற்றி ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பாதையில் தான் விவசாய நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர், ஆனால் இந்த சாலை பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் விவசாய பொருட்கள் தேங்கி நாசமடைகிறது. எனவே சாலை சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T. இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment