Instagram இல் பதிவேற்றம் செய்வதற்காக வீடியோ எடுக்க இருசக்கர வாகன சாகசத்தில் (Bike Racing) ஈடுபட்டவர்களின் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...அபராதம் விதிப்பு... - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 July 2024

Instagram இல் பதிவேற்றம் செய்வதற்காக வீடியோ எடுக்க இருசக்கர வாகன சாகசத்தில் (Bike Racing) ஈடுபட்டவர்களின் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...அபராதம் விதிப்பு...


Instagram இல் பதிவேற்றம் செய்வதற்காக வீடியோ எடுக்க இருசக்கர வாகன சாகசத்தில் (Bike Racing) ஈடுபட்டவர்களின் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...அபராதம் விதிப்பு...


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள், தொடர்ச்சியாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது   கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.உத்தரவுபடி  இன்று 14-07-2024, கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார்  மற்றும் கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர்  பிரபு தலைமையிலான போலீஸார் மஹாதானபுரம், முருகன்குன்றம் மற்றும் இரயில்வே மேம்பாலம்  பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தியும், வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வாகன சாகசத்தில் (Bike race) ஈடுபட்டு    தங்களுடைய Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வீடியோ எடுத்துக் கொண்டிருந்த   8 இருசக்கர வாகனங்களுக்கு தலா  11,000/- ரூபாய் அபராதம் விதித்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  


மேலும் இந்நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தீவிரபடுத்தப்படும் எனவும், இவ்வாறு ஓட்டுநர் உரிமமின்றி  தொடர்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம்  வாகன சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடைவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் எச்சரித்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

No comments:

Post a Comment