காமராஜர் பிறந்த நாள் தீப ஜோதி பேரணி பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 July 2024

காமராஜர் பிறந்த நாள் தீப ஜோதி பேரணி பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்

 

IMG_20240715_200044_385

காமராஜர் பிறந்த நாள் தீப ஜோதி பேரணி பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்


காமராஜர் நற்பணி மன்றம் 16-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தீபஜோதி பேரணியை கொட்டாரத்தில் இருந்து தொடங்கி வைத்தார் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் அவர் பேசியதாவது.


உலகத்திலே சிறந்த முதலமைச்சர் காமராஜர் என்று அமெரிக்கா ஆய்வு முடிவு அறிவித்துள்ளது 9- ஆண்டுகள் சிறையிலும் 9- ஆண்டுகள் முதலமைச்சராகவும் இருந்த காமராஜர் ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர், ஏழை விவசாயிகளின் நலனுக்காக 9- அணைக்கட்டுகள், ஆயிரக்கணக்கான கால்வாய்கள் கட்டியவர், ஏழை விவசாயிகளின் வாழ்வை உயர்த்த தமிழகமெங்கும் மின்சார வசதி தந்தவர், படிக்காத ஏழை குழந்தைகளை படிக்க வைக்க கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை நிறுவியவர் இப்படிப்பட்ட உத்தமரின் பிறந்த தினம் புண்ணிய தினம் என்று சொல்ல வேண்டும், காமராஜர் பிறந்த தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், மெரினா கடற்கரையில் காமராஜருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும், இவ்வாறு பி.டி.செல்வகுமார் பேசினார். இவ்விழாவில் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி தலைவர் சரவணன், செயலாளர் அருள்மணி, சபரி, ராம்கோபால், கண்ணன் ,ரொசிவிங், கலப்பை மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மற்றும் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment