மக்கள் பயன்படுத்தும் குளிக்கும் தண்ணீரில் குப்பைகள் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

மக்கள் பயன்படுத்தும் குளிக்கும் தண்ணீரில் குப்பைகள்

 


மக்கள் பயன்படுத்தும் குளிக்கும் தண்ணீரில் குப்பைகள் 


கன்னியாகுமரி மாவட் டம் விளவங்கோடு  தாலுகா முழுக்கோடு ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை வீசிவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள். அருமனை முழுக்கோடு எல்லை பகுதியான அமுத்திருத்தி பாலம் உள்ளது. இது கோதையாறு குழித்துறை நெடுஞ்சாலை ஆகும் இந்த பாலத்தின் கீழே தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறு ஓடுகிறது.  இந்த ஆற்றின் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தற்போது அந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் வீசிவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அதன் கரையோரங்களில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த கழிவுகள் தண்ணீரில் கலந்து தண்ணீர் மாசுபடுகிறது. மக்கள் துர்நாற்றம் காரணமாக தண்ணீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன்  T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment