சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தாக்கு வாகன ஓட்டிகள் அவதி... - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தாக்கு வாகன ஓட்டிகள் அவதி...


சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தாக்கு வாகன ஓட்டிகள் அவதி...


நாகர்கோவில் அனந்தன் பாலத்திலிருந்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் பிரதான சாலையின் நடுவே ஆபத்தான நிலையில்   ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.


பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.


தினம்தோறும் மருத்துவமனைக்கு 108 -ஆம்புலன்ஸ்கள் அதிகம் செல்லும் இந்த சாலை இப்படி கிடப்பதால் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்ப்படுவது மட்டுமல்லாமல் வேகமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. 


 மேலும் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் சாலை ஓரங்களில் நடந்து செல்லும் பொது மக்களின் மீது தெறித்து மக்கள் குளித்து செல்லும்நிலையும் உருவாகி வருகிறது.


இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் தான் அதிகாரிகளும் வாகனத்தில் செல்கின்றனர் ஏன் அவர்கள் கண்டு கொள்வதில்லை ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை மாநகரில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இந்த குண்டும் குளியுமான சாலைகள் தான் இந்த  பாதுகாப்பு இல்லாத சாலைக்கு எதற்கு சாலை வரிகட்ட வேண்டும் என பொதுமக்கள் குமுரல்.


இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி பார்வையிட்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

No comments:

Post a Comment