மலைவாழ் மக்களின் தண்ணீர் கனவு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா கடையாலுமூடு பேரூராட்சியில் பத்துகாணி நிரப்பு என்ற பகுதியில் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு 5000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. திறந்த சில நாட்களிலேயே அது மக்களுக்கு பயன்படாமல் தண்ணீர் வீணாகி விடுகிறது. கோடை காலங்களில் அங்குள்ள மக்கள் தண்ணீருக்காக வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் நிலையில் உள்ளனர்.இந்த தண்ணீர் தொட்டி பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே பழுதடைந்து தண்ணீர் வீணாகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை என மக்கள் கண்ணீர் மல்க குறை கூறுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment