உறவுக்காக ஏங்கி நிற்கும் மூதாட்டி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

உறவுக்காக ஏங்கி நிற்கும் மூதாட்டி

 


உறவுக்காக ஏங்கி நிற்கும் மூதாட்டி...


 கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா கடையாலு மூடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுகாணி அடுத்த ஆனைகுளம் பகுதியை சேர்ந்தவர் கமலம்மா. வயது 82 அவர்கள் பாதுகாப்பான உறைவிடம் இன்றி மற்றும் போதிய உணவின்றி, உறவுகள் இன்றி, வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகன் மரணம் அடைந்த பின் பாதுகாப்பற்ற இந்த வீட்டில் தனிமையாக வசித்து வருகிறார் இவருடைய கைகள் செயலற்ற நிலையில் உள்ளதால் உணவு சமைத்து சாப்பிட முடியாத நிலையில் உள்ளார். இதனால் அருகில் உள்ள தேவாலயங்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். மழைக்காலங்களில் வீட்டினுள் தண்ணீர் தங்கியும் முற்றம் முழுதும் புற்களால் நிரம்பியும் காணப்படுகிறது. எனவே அரசு தயவு கூர்ந்து ஓய்வூதியம் வழங்கி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மூதாட்டிக்கு மறுவாழ்வு கிடைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment