தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் ஜவாஹிரி தலைமையில் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 July 2024

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் ஜவாஹிரி தலைமையில் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

 


நாகர்கோவில் 31-ஜுலை-2024, காலை 11:00 மணியளவில் நாகர்கோவிலில் மணிமேடை அருகில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் ஜவாஹிரி தலைமையில் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் முகம்மது யாசிர், துணைத் தலைவர் நபில் அஹ்மத், துணைச் செயலாளர் முகம்மது ராபி, கபீஸ், ஆசிக், யஹ்யா என மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


தீர்மானம்;


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் அதிகமான குடும்பங்கள் வயநாடு மற்றும் சூரல்மலா ஆகிய பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர்.


அளவுக்கு அதிகமாக பெய்த கனமழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும்தான் இந்த நிலச்சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


அண்டை மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்த பேரிடர் , பெரிய மனவருத்தத்தை அளிக்கிறது,  இந்த பேரிடரிலிருந்து வயநாடு மக்களும் , கேரள உறவுகளும் விரைந்து நிவாரணம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.


இந்த சோகமான நேரத்தில் தமிழக மக்களுடன், நாங்களும் உங்களோடு துணையாக நிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


நிவாரணப்பணிகளில் கேரள அரசும், இந்திய ராணுவமும் களமிறங்கியுள்ளன. ஒன்றிய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. 


எதிர்கட்சித் தலைவர் அவர்கள் வயநாடு பகுதிக்கு நிவாரணப் பணிகளை பார்வையிட பயணிப்பதாக செய்திகள் வருகின்றன.


ஒன்றிய அரசு வழக்கம்போல் செய்து வரும் அரசியலை இந்த இழப்பின் போதும்  செய்து விடாமல் மக்களுடனும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசோடும் உறுதுணையாக நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


கடந்த பட்ஜெட்டில் எதிர்கட்சிகளின் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் காட்டிய பாரபட்சத்தை இந்த அழிவின் போதும் தொடராமல் கேரள அரசுக்கு நிதி உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,

செய்யது அஹமது கரீம், மாவட்ட செயலாளர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment