குமரியில் ஆகஸ்ட் - 4 ல் ஆடி அமாவாசை பக்தா்கள் புனித நீராடுகின்றனா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை நாளன்று ஆயிரக்கணக்கான உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் புனிதநீராடி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக அன்றைய தினம் அதிகாலை 3. 30 மணிக்கு பகவதியம்மன் கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிா்மால்ய பூஜையும் நடைபெறும். தொடா்ந்து அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை ஆகிய அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படும்.
அதிகாலை 4 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் முக்கடல் சங்கமம் கடற்கரையில் புனித நீராடுவாா்கள். பின்னா் தங்கள் முன்னோரை நினைத்து பலிகா்ம பூஜை கொடுத்து தா்ப்பணம் செய்கின்றனா். மீண்டும் கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனா். இதையடுத்து பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனா். பக்தா்கள் தரிசனத்துக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆறாட்டு: இரவு 7. 30 மணிக்கு அம்மன் வீதியுலா முடிந்ததும் இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். இதையடுத்து கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
No comments:
Post a Comment