தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் - செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 August 2024

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் - செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.


அழகிய முன்மாதிரி இப்ராஹிம் அலை என்ற தலைப்பில் ஜூன் முதல் மார்ச் வரையிலான பத்து மாத தொடர் பிரச்சாரத்தை சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை அறிவித்துள்ளது. இந்த பத்து மாத பிரச்சாரத்தின் செயல் திட்டங்கள் குறித்த செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் தவ்ஹீத் ஜமாத் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக திருவிதாங்கோட்டில் மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயலாளர் முஹம்மது ஒலி மற்றும் பேச்சாளர் மசூத் உஸ்மானி செயல்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். 


இதில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம் பொருளாளர் முஹம்மது யாசிர் துணைத் தலைவர் நபில் அஹ்மத் துணைச் செயலாளர்கள் முகமது ராபி, ஹபீஸ், யஹ்யா, ஆசிக் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் பெண்கள் குழுவினர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

  1. ஆகஸ்ட் மாத செயல்திட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மது மற்றும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்தவது என தீர்மானிக்கப்பட்டது.
  2. இந்தியா முழுவதும் போதை பொருள்களின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை மட்டும் பார்க்காமல் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் என இந்த செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
  3. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசை இந்த செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
  4. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் ஏழு சதவீதம் அதிகரிக்க வேண்டும். 

No comments:

Post a Comment