நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்கள் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட மக்கள் தர்ணா போராட்டம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 August 2024

நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்கள் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட மக்கள் தர்ணா போராட்டம்


 நிதி நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்கள் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட மக்கள் தர்ணா போராட்டம் 


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடிகள் மோசடி செய்த 7 பேரில் ஒருவரான சார்லஸ் என்பவரின் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (20-08-2024) இரவு 9.30 மணி அளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரின் மகனின் திருமணம் நாளை மறுநாள் நடக்க இருப்பதால் மக்களிடம் ஏமாற்றிய நகை மற்றும் பணத்தினை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். வீட்டின் முன் அடுப்பு அமைத்து கஞ்சி வைக்க ஏற்பாடு செய்தனர்.அருமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T. இராஜேஷ்குமார்

No comments:

Post a Comment