குண்டும் குழியுமாக மாறிய சாலை
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுக்கா வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளாங்கோட்டிலிருந்து பாரத பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமலும்,மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகியும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறி விழுந்துதான் இந்த சாலையை கடக்கின்றனர். இந்த சாலையை எந்த ஒரு அதிகாரிகளும் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment