தெற்பகடவு பாலம் சரியாகுமா?
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா கடையல் பேரூராட்சிக்குட்பட்ட தெற்பகடவு என்னும் இடத்தில் ஆற்றைக் கடக்க மக்கள் தெற்பங்களில் சென்று வந்தனர். பிறகு ஆற்றை கடக்க ஒரு இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. இரும்பு பாலம் மக்களின் நடைமுறைக்கு வரும் தருவாயில் 1992ல் தண்ணீர் அதிகமாக வந்து அந்த பாலத்தை அடித்து சென்றது. பிறகு இன்று வரை அந்த பாலம் சரி செய்யப்படவில்லை. திற்பரப்பு கடையாலுமூடு ஆகிய இடங்களை இணைக்கும் பாலமாக அது இருந்தது. இப்போது மக்கள் வள்ளத்தில் தான் பயணம் செய்கின்றனர். இந்த பாலம் சரி செய்யப்படுமா என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment