தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழக காங்கிரஸ் கட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு கட்சியில் கடந்த காலங்களில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு தமிழக காங்கிரஸ் மகளிர் அணி மாநில தலைவி, மகளிரணி அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற கொறடா உள்பட பல முக்கிய பொறுப்புகளை காங்கிரஸ் கட்சி தலைமை வழங்கி கௌரவித்தது.மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியதால் காங்கிரஸ் கோட்டையான விளவங்கோடு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் காங்கிரஸ் கட்சியின் அருமையை உணராமல் விஜயதாரணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறிய வாக்குறுதியை நம்பி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். ஆனால் அண்ணாமலை கூறிய படி கடந்த பாராளுமன்ற தேர்தலில் விஜயதாரணிக்கு பாரதிய ஜனதா கட்சி "சீட்" கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. அதை எண்ணி தற்போது வருத்த பட்டு தன்னை ஆறு மாதமாக பாரதிய ஜனதா கட்சி கண்டு கொள்ளாமல் எந்த பொறுப்பும் வழங்க படவில்லை என்பதை கருத்தில் கொண்டு தனது வேதனையை பொது வெளியில் புலம்பி கொட்டி தீர்த்து இருக்கிறார். எனவே பெண்களுக்கு அதுவும் விஜயதாரணி போன்ற பெண்களுக்கு அரசியலில் மிகப்பெரிய அளவில் பதவிகளை பொறுப்புகளை கொடுத்து அவர்களையும் சமுதாயத்தில் பணியாற்ற மிக பெரிய வாய்ப்புக்களை கொடுத்து கொண்டு இருக்கும் கட்சி காங்கிரஸ் என்பதை மறந்து விட்டு பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேர்ந்து விட்டு தற்போது தன்னை பாரதிய ஜனதா கட்சி "பாசம் காட்டி" மோசம் செய்து விட்டது என்று வருத்த பட்டு கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதை விட அந்த கட்சியின் உண்மை ரூபத்தை இப்போதாவது விஜயதாரணி உணர்ந்து புரிந்து கொண்டதால் மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படை கருத்தை மனதில் வைத்து விஜயதாரணி மீண்டும் அவரது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்
No comments:
Post a Comment