பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஆவின் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தாலுகா அருமனை பேரூராட்சிக்குட்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்று உள்ளது. அதற்கென்று ஒரு அரசு கட்டிடம் ஒன்று உள்ளது. 27 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த சங்கம் பல ஊழல்கள் காரணமாக தற்சமயம் பூட்டிய நிலையில் உள்ளது. அந்த கட்டிடம் முழுவதுமாக நாசமாகி காணப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் சிறப்பாக செயல்பட்டால் பல மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமையும். பல கால்நடை விவசாயிகள் நலன் பெறுவார்கள். அது மட்டுமில்லாமல் அந்த இடமே குப்பை தொட்டியாக காணப்படுகிறது. எனவே அரசு தாயே கூர்ந்து இந்த ஆவின் பாலகத்தை மக்கள் பயனடையுமாறு புதுப்பொலிவாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment