அருமனை திருவனந்தபுரம் வழித்தடத்தில் போக்குவரத்து தொடக்கவிழா
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை வட்டாரபகுதிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 7 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தபட்ட அருமனை_திருவனந்தபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையிலான போக்குவரத்து தொடக்கவிழா இன்றுகாலை அருமனை சந்திப்பில் நடைபெற்றது. பாறசாலை சட்டமன்றதொகுதி உறுப்பினர் தோழர் .சி.கே.ஹரிந்திரன் பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதி உறுப்பினர் திரு.மனோதங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தோழர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்றினர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.ஆர்.லீமாறோஸ், சிபிஎம் அருமனை வட்டாரக்குழு செயலாளர் தோழர்.ஆர்.ஜெயராஜ் மற்றும் கேரள அரசுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிகொண்டனர்.
அருமனை_திருவனந்தபுரம் பஸ் பயணிக்கும் நேரம் காலை 8 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment