கீழே கண்டெடுத்த நான்கு கிராம் தங்க மோதிரம், 3500 ரூபாய் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு.. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

கீழே கண்டெடுத்த நான்கு கிராம் தங்க மோதிரம், 3500 ரூபாய் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு..

 

IMG-20240922-WA0013

கீழே கண்டெடுத்த நான்கு கிராம் தங்க மோதிரம், 3500 ரூபாய் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு..


கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மந்தாரம்புதுா் பகுதியை சோ்ந்த மோகன், சித்தாா்த், குணசீலன் ஆகியோா் கீழேகிடந்து ஒரு பா்சை கண்டெடுத்து அதை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள  தனிப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.  அந்த பா்சில் ருபாய் 3500, 3ATM காா்டு மற்றும் 4 கிராம் தங்க மோதிரம் இருந்தது ATM கார்டில் இருந்த தகவல் மூலம் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நேர்மையுடன் செயல்பட்ட மோகன், சித்தாா்த், குணசீலன் ஆகியோரை காவல் துறையினா் வெகுவாக பாராட்டினா்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.என்.சரவணன்

No comments:

Post a Comment