கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 September 2024

கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல்

IMG-20240928-WA0047

கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - குடிபோதையில்  ஓட்டி வரப்பட்ட இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில்   நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில்,  நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர்  வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.


அப்போது, கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச்  சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்த போது இருவரும் குடிபோதையில்,  ஆட்டோ இயக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆசாரி பள்ளம் அரசு  மருத்துவமனையில் பரிசோதனை செய்து குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு  இரண்டு ஆட்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


மேற்படி குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக தலா ரூ.10000 அபராதம் விதிக்கப்படலாம்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment