தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 September 2024

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

 

IMG-20240929-WA0069

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.


தமிழகத்தில் நீண்ட நாள்களாக திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோரின் விருப்பமாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது தான் கனிந்திருக்கிறது. 


2021 இல் திமுக அரசு பொறுப்பேற்ற போது அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தான் முதன் முதலில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அவருக்கு 2022 ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பு தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு  தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சருக்கு தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார் மேலும் தனது துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் பொறுப்பையும் மிக சரியாக கவனித்து சிறப்பாக செயல் பட்டு தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய பணி செய்வார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் அவரது அரும் பணி சிறக்கவும் வாழ்த்துக்களையும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்தார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment