கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமத்தில் கண்காணிப்பு கேமரா டி.எஸ்.பி. மகேஷ்குமார் இயக்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 September 2024

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமத்தில் கண்காணிப்பு கேமரா டி.எஸ்.பி. மகேஷ்குமார் இயக்கி வைத்தார்.

 


கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமத்தில் கண்காணிப்பு கேமரா டி.எஸ்.பி. மகேஷ்குமார் இயக்கி வைத்தார்.


கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமம் சந்திப்பில் பொதுமக்கள் நலன்கருதி செயலிழந்த நிலையில் இருந்த கண்காணிப்பு கேமரா புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.


இதன் திறப்பு விழா நிகழ்வுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை வகித்தார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார் கேமராவை மீண்டும் செயல்படுத்தி தொடங்கி வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களின் நலன்கருதி கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். இவரது இந்த சேவை காவல்துறையினரால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதிகமாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் சந்திப்புகளில் நடைபெறும் வாகன விபத்துகள், திருட்டு உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை கலப்பை மக்கள் இயக்கம் செயல்படுத்தியது.


இந்நிலையில் கனமழை நேரங்களில் சில கண்காணிப்பு கேமராக்கள் செயழிந்து விட்டது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பழுநடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தும் பணியில் கலப்பை மக்கள் இயக்கம் ஈடுபட்டது. இந்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதற்கான திறப்புவிழா இன்று நடைபெற்றது.


கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை வகித்த இந்த நிகழ்வில், கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார் கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்

No comments:

Post a Comment