நாகர்கோவில் செம்மாங்குளம் தூர்வாரி சீரமைக்க வேண்டும். காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கோரிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 30 September 2024

நாகர்கோவில் செம்மாங்குளம் தூர்வாரி சீரமைக்க வேண்டும். காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கோரிக்கை

 


நாகர்கோவில் செம்மாங்குளம் தூர் வாரி சீரமைக்க வேண்டும். காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கோரிக்கை


 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-


நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையின் அருகில் உள்ள செம்மாங்குளம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற குளமாக இருந்தது. 


இந்த குளத்தில் தான் நாகர்கோவில் சுற்று வட்டார பொது மக்கள் குளிப்பதற்கும் வீட்டு உபயோகத்திர்க்கும் தண்ணீரை பயன் படுத்தியும் விவசாயத்திற்கும் பெருமளவில் பயன் படுத்தி வந்தனர். இந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலுக்கு வரும் பக்தர்கள் செம்மாங்குளத்தில் குளித்து விட்டு செல்லும் காலம் இருந்தது. இந்த நிலையில் நாளடைவில் செம்மாங்குளம் முறையாக பராமரிக்கப்படாமல் கழிவு நீர் கலந்து தற்போது எந்த வித பயன்பாட்டிலும் இல்லாமல் உள்ளது. இங்கு புல் புதர்கள் மண்டி கிடக்கின்றன. கழிவு நீர் பல வருடமாக சேர்ந்ததால் செம்மாங்குளம் கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. 


இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. குளத்தின் கரைகளில் பொது மக்கள் கழிவு பொருட்களை அதிகளவில் கொட்டி வைத்துள்ளனர். 


எனவே செம்மாங்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அங்கு கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். செம்மாங்குளத்தை தூர் வாரி சீர் அமைத்தால் அங்கு மழை நீர் தானாகவே அதிக அளவில் சேகரிக்கப்படும். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து சுகாதார சீர்கேடும் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் செம்மாங்குளத்தின் கரைகளை பலப்படுத்தி அழகு படுத்த வேண்டும். இதனால் அப்பகுதி இயற்கை அழகு பெறும். எனவே பொது மக்கள் நலன் கருதி இது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து செம்மாங்குளத்தை மீண்டும் புதுப்பொலிவு அடையச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment