போக்குவரத்து காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 October 2024

போக்குவரத்து காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது

 


போக்குவரத்து காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது 


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவதனம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  திரு மகேஷ் குமார் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் அன்று சிறப்பு வாகன தணிக்கையில் (Dark night) கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் திரு  பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு  ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள்  கன்னியாகுமரி,


விவேகானந்தபுரம் மற்றும் கொட்டாரம் பகுதியில் 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் , வாகனத்தில்  ஓட்டுநர் உரிமம்  இன்றியும், அதிவேகம் மற்றும் நம்பர் பலகை இல்லாத 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து  அபராதம் விதிக்கப்பட்டதுடன் நம்பர் பலகை இல்லாத வாகனங்களுக்கு நம்பர் பலகை பொறுத்தபட்டது.


மேலும்302 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ 2,43,700  அபராதம் விதிக்கப்பட்டது. 4 சக்கர கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல்,  செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யபட்டு வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment