கன்னியாகுமரி இந்து மகாசபை தலைவர் தா.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 October 2024

கன்னியாகுமரி இந்து மகாசபை தலைவர் தா.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி.

 

IMG-20241011-WA0003

கன்னியாகுமரி இந்து மகாசபை தலைவர் தா.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி.


கடந்த முறை நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி உயிரிழந்தார் அதனை வைத்து தமிழகத்தில் திமுக  அரசியல் நடத்தியது, ஆனால் இந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவி புனிதா  தற்போது உயிரிழந்து உள்ளார். இது பற்றி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை,தேர்தல் காலங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னவர்கள் வாய் மூடி மௌனியாகிவிட்டார்கள். நீட் தேர்வு வராது என்று கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை தான் என நாகர்கோவில் இந்து மகா சபா தலைவர் தா. பாலசுப்பிரமணியன். செய்தியாளர்களுக்கு பேட்டி-மேலும் நவராத்திரியை ஒட்டி அறநிலையத்துறையின் கீழ் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு யானை கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும். நவராத்திரி என்பது ஓர் ஆண்டோடு முடிக்க போகும் நிகழ்ச்சி அல்ல ஒவ்வொரு ஆண்டும் யானைக்காக போராட முடியாது,எனவே நிரந்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு யானையை வளர்த்து பராமரிப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment