நுாருல் இஸ்லாம் பல்கலை.. பேராசிரியருக்கு நல்லாசிரியர் விருது
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை பேராசிரியராக பணிபுரிந்து வரும் டாக்டர் தனேஷ் என்பவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.
நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் பேராசிரியர் மற்றும் இலக்கிய மன்ற செயலராகவும் பணியாற்றிகொண்டிருக்கின்ற தனேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதினை பெற்றுள்ளார்.
கல்வித்துறை யில் அவர் ஆற்றிய சிறப்பான சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் அவரது பங்களிப்புகள் ஆகியவற்றை மதிப் பீடு செய்து, மக்கள் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் , திருச்சிராப்பள்ளியில் நடத்தியது. அந்த மாநாட்டில், தமிழக விருதுகள் வழங்கப் பட்டது.
இவர் தெ.தி. இந்துக்கல்லூரி, சர்தார்ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் வேளாண்மை கல்லூரியிலும் உதவி பேராசிரியராகவும், தமிழ் துறைத் தலைவராகவும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் மக்கள் சட்ட உரிமைகள் கழக சேவை இயக்க நிறுவனர் வழங்கிய தமிழக அளவிலான நல்லாசிரியர் விருது பெற்ற பேராசிரியரை நூருல் இஸ்லாம் பல்கலைகலைக்கழக வேந்தர் மஜீத் கான், இணை வேந் தர்கள் பைசல்கான், பெருமாள்சாமி துணை வேந்தர் டெஸ்ஸி தாமஸ், இணை துணை வேந்தர் ஜனார்த்தனன், பதிவாளர் திருமால்வ ளவன் மற்றும் பேராசி ரியர்கள் பாராட்டினர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
No comments:
Post a Comment