கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் மாவட்ட ஆயுதப்படையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு "Open House" எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி...
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுந்தரவதனம் அவர்கள் உத்தரவின்படி, பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Open Houseஎனப்படும் நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.
இந்த Open House நிகழ்ச்சியில் Little Flower பெண்கள் மேல்நிலைப்பள்ளி, Carmel மேல்நிலைப்பள்ளி மற்றும் Good Shepard மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றி பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி காண்பிக்கப்பட்டு, சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் ஆயுத வகைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது. காவல்துறையினரின் கவாத்து (Parade) தொடர்பான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்பு பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் Life Jacket, Life Boat, Lifebuoy ring ஆகியவையும் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர்ஜோசப், காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் உதவி ஆய்வாளர் சுமித் அட்ரிலின் கலந்து கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment