நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது.
பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை மாநாட்டுக்கு மொத்தம் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் அதிகம் உள்ளதால் மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment