ஆளுநர் பதவி நீக்கம் முதல் மாநில உரிமைகள் வரை.. த.வெ.க.வின் அதிரடி அரசியல் கொள்கைகள்! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 October 2024

ஆளுநர் பதவி நீக்கம் முதல் மாநில உரிமைகள் வரை.. த.வெ.க.வின் அதிரடி அரசியல் கொள்கைகள்!


 ஆளுநர் பதவி நீக்கம் முதல் மாநில உரிமைகள் வரை.. த.வெ.க.வின் அதிரடி அரசியல்  கொள்கைகள்!



நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்து வருகிறார்.அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை . மதம் சாதி இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது. மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம். எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம். மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும். போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம். நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம். கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை உருவாக்கப்படும் வர்ணாசிர கோட்பாடுகள் எந்த வகையிலும் முழுமையாக எதிர்க்கப்படும். தமிழ் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழநாட்டுக்கு எப்போதும். ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க உறுதி வழங்கப்படும். கல்வியை மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும். பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் தகவல் தொழிலநுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும் பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும் அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும் மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்

No comments:

Post a Comment