நாகர்கோவில் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடைகள்.. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 October 2024

நாகர்கோவில் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடைகள்..


நாகர்கோவில் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக  டாஸ்மாக் கடைகள்..


மூடக்கோரி விசிக 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:  விசிக மாவட்ட செயலாளர் அல்காலித் அறிவிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுவிலக்கு விசிகவின் இலக்கு என்னும் பொது சிந்தனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. அதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் பிரமாண்ட மது ஒழிப்பு மாநாடும் கடந்த 2 ஆம் தேதி நடத்தியது.


இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் கலந்து கொண்டது விசிகவின் சாதனையாகும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், இதுதொடர்பாக வரும் 8 ஆம் தேதி உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசிக்க இருப்பதும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டின் வெற்றிக்குச் சான்றாகும். அதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள். 


அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், பேருந்து நிலையங்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கு  அருகிலும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றையும் இந்தப் பட்டியலில் இணைத்து அகற்ற வேண்டும்.


மிகக் குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சியில் நான்கு மூலைகளிலும் உள்ள பார்வதிபுரம், புத்தேரி, இடலாக்குடி, பீச் ரோடு  வரையிலான பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை  உடனே அகற்ற வேண்டும். அவற்றில் மிகக் குறிப்பாக பிவெல், கோபாலப் பிள்ளை மருத்துவமனைகளின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நான்காம் வழித்தட பேருந்துகள் வெளியில் வரும் பகுதியில் உள்ள கடை, வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை, முத்து தியேட்டர் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, பீச் ரோடு ஆயுதப்படை முகாம் செல்லும் சாலையில் உள்ள  டாஸ்மாக் கடை உள்பட நாகர்கோவில் மாநகருக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இதில் இணைத்து அப்புறப்படுத்த வலியுறுத்துகிறேன். 


இல்லாதபட்சத்தில் வரும் 11 ஆம் தேதி, நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிரைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னரும் அகற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment