காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-

 


காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-


நாகர்கோவில் மாநகரத்தின் மைய பகுதியாக விளங்கும் பீச்ரோடு ஜங்ஷனில் வலம்புரி விளை  குப்பை கிடங்கு உள்ளது. இது 50(ஐம்பது) வருடங்களுக்கும் மேலாக நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போதும் இந்த குப்பை கிடங்கு நடை முறை செயல் பாட்டில்  உள்ளது.இப்போது இங்கு குப்பைகள்  மலை போல் தேங்கி உள்ளது.தினம் தோறும் நூறு டன் வரை குப்பை இங்கு தற்போது கொட்டப்படுகிறது. தற்போது மாநகராட்சி நிர்வாகம் மினி லாரிகள் மூலம் இவற்றை சாலைகள் வழியாக கொண்டு சென்று பீச்ரோடு வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்நிலையில் பீச்ரோடு குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பல வருடங்களாக கோரிக்கை விடப் பட்டும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப் படவில்லை.கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது பீச்ரோடு ஜங்ஷனில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனர். மேலும் பீச்ரோடு பகுதியை சுற்றி ஆஸ்பத்திரிகள் பள்ளிக்கூடங்கள் தொழிற்கூடங்கள் வணிக நிறுவனங்கள் போன்றவைகள் செயல்பட்டு வருகின்றன.இக் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ எரிந்து கரும் புகை ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் மற்றும் குப்பையில் இருந்தும் துர் நாற்றம் வீசுவதால் இப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.இந் நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் ஓடை கழிவுகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லும் போது அதில் இருந்து சாலையில் கொட்டுவதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் காலை நேரத்தில்  குப்பைகளை ஏற்றி வரும் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு ஒவ்வொன்றாக நகர்வதினால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த பகுதியில் அவசர அவசரமாக கடந்து குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை இதனால் பொது  மக்கள் தினம் தினம் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி  மாநகராட்சி நிர்வாகம் பீச்ரோடு ஜங்ஷனில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கை பொது மக்கள் பாதிக்காத வகையில் வேறு இடத்திற்கு மாற்றி கொண்டு செல்ல வேண்டும் என  காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்

No comments:

Post a Comment