போக்குவரத்து காவல் துறை - பதிவெண் பொருத்தாமல், வாகன நிறம் மாற்றி,மிக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி, அபாயகரமாக இயக்கிய இருசக்கர வாகன ஓட்டுநருக்கு ரூ.25000 அபராதம், வாகனம் பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 November 2024

போக்குவரத்து காவல் துறை - பதிவெண் பொருத்தாமல், வாகன நிறம் மாற்றி,மிக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி, அபாயகரமாக இயக்கிய இருசக்கர வாகன ஓட்டுநருக்கு ரூ.25000 அபராதம், வாகனம் பறிமுதல்

 


நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - பதிவெண் பொருத்தாமல், வாகன நிறம் மாற்றி,மிக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி,  அபாயகரமாக இயக்கிய இருசக்கர வாகன ஓட்டுநருக்கு ரூ.25000 அபராதம், வாகனம் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களின் உத்தரவின் பேரில்   நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர். லலித்குமார்,


அவர்களின் மேற்பார்வையில்,  நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில்  வாகன சோதனை நடத்தினர்.அப்போது, நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் ஓட்டி வந்த R15 என்ற இருசக்கர  வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் பதிவெண் பொருத்தப்படாதது, மிக அதிகமாக ஒலி எழுப்பும் சைலன்சருடன் இயக்குதல், அபாயகரமாக பொதுமக்களுக்கு இடையூறு செய்து இயக்குதல், வாகன நிறம் மாற்றி இயக்குவது தெரியவந்தது.


மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் படி, மேற்படி வாகன ஓட்டுநருக்கு ரூ.25000 அபராதமாக விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment