மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 75 வது இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 75 வது இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 75 வது இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 


இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மதியழகன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். பாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்.செந்தாமரைக்கண்ணன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


உறுதிமொழி இந்திய மக்களாகிய நாம்  இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயசார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம் அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்பு பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கியதனால், இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவண்ன்

No comments:

Post a Comment