வருவாய்த்துறையினர் இன்று மூன்றாவது நாள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்ச வரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். வருவாய்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்இந் நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறுச்சோடி காணப்படுகின்றன இதனால் அன்றாட பணி முடங்கியுள்ளது, மேலும் அவர்களின் தொடர் போராட்டமும் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment