நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 November 2024

நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 


நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறக் கோரி நாகர்கோயில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வணிகர் மகாஜன சங்க கன்னியாகுமரி  மாவட்ட தலைவர்& தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சின்னக்கனி அவர்கள் தலைமை வகித்து மாவட்ட பொருளாளர் மாணிக்கம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் முஜீப் ரஹ்மான், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஹமீது பயாஸ் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். 


மகளிர் விடுதலை இயக்கத்தின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் ராணி மணிகண்டன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


தோழர்கள் தொல்காப்பியன், பகலவன், சேக் முகமது, மணவை கண்ணன், குணா மதிமுக,மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் கோட்டார் யூசுஃப் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். 


திருமா செந்தில் அவர்கள் நன்றி உரையாற்றி இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.


இந்தக் ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் மாநகர மாவட்ட சிறுத்தைகள் சிறுத்தை சையது, தஸ்தகீர், செல்வி, சர்ஜுன் உபைஷ், பொன்ராஜ், ஜான் அசுன், கருப்பு ரெஜி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment